Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனம் பெற்றுக் கொள்வதற்காக நூற்றி முப்பது முகவர் நிலையங்கள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
முகவர் நிலையங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளின் படியே
நேர்முகப்பரீட்சை நடத்தி புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாகவும் முகவர் நிலையங்களுக்கு எதிராக கடந்த
காலங்களில் முறைப்பாடுகள் ஏதும் கிடைத்திருப்பின் அது கவனத்திற்கொள்ளப்படுமெனவும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் அறிவித்துள்ளார்.
மேலும், இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இதுவரை 4400 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஹஜ் பயணத்தை உறுதி செய்யுமாறு 3,000 விண்ணப்பதாரிகளுக்கு திணைக்களம் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் தமது பயணத்தை
திணைக்களத்திடம் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் பணிப்பாளர் கேட்டுள்ளார்.
திணைக்களம் ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்களை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago