Editorial / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக் ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட்
அதிகாரம் ஒருவரிடம் குவிந்து கிடக்கிறது என்பதற்காக, ஹிட்லரின் வாரிசு போல் இனி யாரும் செயற்பட முடியாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியின் முரட்டுப் பிடிவாதத்துக்கான சிறந்த வைத்தியத்தை, நீதிமன்றம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவர், ஜனாதிபதியைப் பற்றிக் கருத்துக் கூறுவத்துக்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 50 நாள்களில் ஜனாதிபதி யார் என்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருப்பர் என்றும் மிஸ்டர் பீனின் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்க மட்டுமே முடியுமெனவும் அதுபற்றி ஆராய்ந்து, நேரத்தை வீணாக்குவதில் எந்தப் பயனுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago