2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 90 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவரை நேற்று (23) திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேகநபர்,  41 வயதுடையவர் எனவும், இவருக்கெதிராக ஏற்கனவே ஹெரோய்ன் வைத்திருந்தமை தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை, தடுத்து வைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .