Editorial / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஏம்.ஏ.பரீத்
திருகோணமலை, இறக்கக் கண்டி பகுதியில், வீடொன்றில் வைத்து, நேற்று (05) ஹெரோயன் போதைப் பொருளுடன், ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொழும்பு - 08, பொரளையை பிறப்பிடமாகவும், வாழை ஊற்று இறக்கக்கண்டி, நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையதுடைய குடும்பஸ்தரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 2515 மில்லி கிராம் ஹொரோய்ன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களுக்கும் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago