Freelancer / 2022 ஜூலை 31 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த நபரொருவரை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் சனிக்கிழமை (30) உத்தரவிட்டார்.
முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சூட்சுகமான முறையில் ஹேரொயின் போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக தம்பலகாமம் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மூன்று கிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் கைது செய்ததாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
29 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
3 hours ago