Freelancer / 2022 ஜூன் 01 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவரை, இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(1) உத்தரவிட்டார்.
அதாவது கேணியடி, திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் ஹேரொயின் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே 6 கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago