2025 மே 15, வியாழக்கிழமை

‘வெளி மாவட்டங்களுக்கு மண் எடுத்து செல்வதை தடை செய்யவும்’

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஜூன் 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களிலிருந்து, வெளி மாவட்டங்களுக்கு மண் எடுத்து செல்வதற்குத் தடை செய்யயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கையை, திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விடுத்துள்ளார்.

இப் பிரதேசங்களிலிருந்து  இரவு, பகலாக நாளொன்றுக்கு 400க்கு மேற்பட்ட பாரவூர்த்திகள் ( Tippers) மூலம் மண், வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது .

இதனால் இப்பிரதேசங்களில் கடுமையான சூழல் பாதிப்புகள் நிகழக்கூடிய அபாயங்கள் உள்ளதால், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு, அவர் தனது கோரிக்கையில் வலியுத்தியுள்ளார்.

அத்துடன், இம் மாவட்டத்துக்குள் மாத்திரம் அனுமதி வழங்க கோரி,  மகாவலி  அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதயா செனவிரத்ன மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் எரிக் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .