Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில்கள் சம்மேளனத்தினுடைய பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சம்மேளனத்தின் திருகோணமலை மாவட்டத்துக்கான புதிய தலைவர் கு.குலதீபன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு வகையான கைத்தொழில்களை மேற்கொள்ளக்கூடிய வளம் காணப்படுகின்றது. இதனால் சுற்றுலாத்துறை, கட்டட ஒப்பந்தக்காரர்கள் சங்கம், கைத்தொழில் அபிவிருத்தித்திட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அமைப்பு ஆகியவற்றை இந்தச் சம்மேளனத்துக்குள் உள்வாங்க பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களை அதிகரிப்பதன் மூலம் இங்குள்ள வர்த்தகர்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் கூறினார்.
இந்த வருடத்துக்கான புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அவர்களுடைய அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது தலைவராக கு.குலதீபனும் செயலாளராக ஏ.ஆர்.முகமட் சைபுல்லாவும் பொருளாளராக மாட்டின் ஜி.ஜெயகாந்தும் பதவியேற்றனர்.
6 minute ago
20 minute ago
28 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
28 minute ago
47 minute ago