Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
சம்பூர் அனல் மின்நிலையத்துக்கென எடுக்கப்பட்ட காணிகள், அந்த மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும். மாகாண சபைக்குள்ள காணி அதிகாரங்களைப் பயன்படுத்த கிழக்கு மாகாண அமைச்சர் முன்வரவேண்டும் என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாகீர், இன்று வியாழக்கிழமை (22) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 63 ஆவது அமர்வில், அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப்பிரிவிலுள்ள தொட்டாச்சினிங்கி வெட்டை தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான பிரேரணையை ஆதரித்து லாகீர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தப் பிரேரணையை சபையில் கொண்டுவந்தமைக்கு கலையரசனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றி, மக்களின் காணிகளை விடுவியுங்கள் என, நாங்கள் இந்த சபையில் போராடி வருகிறோம். மறுபக்கத்தில், படையினர் காணிகளைப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதூரில் வட்டம் பகுதியிலுள்ள கடற்படை முகாமை அகற்றுங்கள் என நாம் கோரி வரும் நிலையில், படையினர் அந்தப்பகுதியில் நில அளவை செய்துள்ளனர்.
இவ்வாறே தோப்பூர், புல்மோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள படையினரின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த மாகாண சபை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். எமது முத்திரை வரிகளை மாகாண சபைக்கு நாம் வழங்கி வருகின்றோம். அதிகாரங்களை பயன்படுத்தக்கூடிய அமைச்ரொருவரையே நாம் நியமித்துள்ளோம்.
இவ்வாறே சம்பூர் அனல் மின்நிலையத்துக்கு எடுக்கப்பட்ட காணிகள், அந்த மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் எனவும் உறுப்பினர் லாகீர் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago