2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'அரக்கனிடம் இருந்து விடுபட்டு இராட்சனிடம் மாட்டிக்கொண்டோம்'

Princiya Dixci   / 2016 ஜூன் 16 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம், எஸ். சசிகுமார்

'நாடு, தற்போது யுத்தம் என்ற அரக்கனிடமிருந்து விடுபட்டு, இரசாயன முறையிலான விவசாயம் எனும் இராட்சனிடம் சிக்கியுள்ளது. அதன் மூலம் விளையும் உணவுப் பொருட்களை உட்கொண்டு நாமே எமது அழிவைத் தேடுகின்றோம்' என தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார   தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விசேட செயற்றிட்டமான நஞ்சற்ற நாடு செயற்றிட்டத்தின், நிலையான அபிவிருத்திக்கான சேதன முறையிலான பயிர்ச்செய்கை எனும் விழிப்புணர்வு நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் புதன்கிழமை (15) இடம்பெற்றது.

அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'நாம் அறியாமலேயே எமது சந்ததிகளை அழித்து வருகின்றோம். இன்று புதிதாகத் திருமணமாகும் தம்பதிகளில் 5பேரில் மூவருக்கு, குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போகிறது. எனவே, நமது சந்ததியின் அழிவை, நாம் உட் கொள்ளும் உணவுப் பொருட்களின் வாயிலாக நாமே ஏற்படுத்துகின்றோம்' என்றார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அதிதிகளாக தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், வீதி அபிவிருத்தி  அமைச்சர் ஆரியபதி கலபதி, கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, சுகாதார அமைச்சர் நசீர் ஆகியோர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் திணைக்கள் தலைவர்கள் விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சோதனை விவசாயத்தில் விசேட நிபுணரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்காரால் நடாத்தப்படும் நான்காது மாகாண மட்ட விழிப்புணர்வு நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X