2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி உண்ணவிரதம்

Thipaan   / 2016 ஜூன் 27 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலி ஒழுவ சந்தியிலுள்ள, மகாவெலி கம நவோத்ய வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், இன்று திங்கட்கிழமை (27) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்த உண்ணாவிரதத்தில் சுமார் 60 பேர் ஈடுபட்டுள்ளதுடன், தமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாவெலி கம நவோத்ய வித்தியாலயத்தில் 443 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் 28 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 20 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 8 ஆசிரியர்களையும் நியமிக்குமாறு கோரியே இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தினால் மஹிந்தோதய ஆய்வு கூடம் நிர்மாணிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படவில்லையெனவும் அதனை திறக்க வேண்டுமெனவும் பாடசாலைக்கு சுற்று மதில் அமைத்து தருமாறு கோரியும் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவிடயமாக கந்தளாய் வலய கல்வித் திணைக்களத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, வலயக்கல்வி பணிப்பாளர் வெளிநாடு சென்று நேற்றிரவு வருகை தந்துள்ளதாகவும் அவர் விடுமுறையில் உள்ளதாகவும் தகவல் ஏதும் வழங்க முடியாது எனவும் அங்கு கடமையாற்றிகின்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X