2021 மே 17, திங்கட்கிழமை

ஆவணம் தொடர்பில் விவசாயிகள் அக்கரையுடன் செயற்படவேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

'அரச காணிகளுக்கான வலிதான ஆவணம் தொடர்பில் விவசாயிகள் அக்கரையுடன் செயற்பட வேண்டும்' என சட்டத்தரணி மொஹமட் லத்தீப் பைஸர் தெரிவித்தார்.

அரச காணி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு திங்கட்கிழமை (21) தோப்பூர் கமநலச் சேவைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'விவசாயிகள் தமது காணிகளுக்காக வைத்திருக்கும் போலியான ஆவணங்களை உரிய முறைப்படி விண்ணப்பம் செய்து, அரச காணி அனுமதிப்பத்திரத்தையோ அல்லது அளிப்பு பத்திரத்தையோ பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், அரச காணிகளை பகிர்ந்தளிப்பதில் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே பாரிய பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.

இதனை குறைப்பதற்கு  குடும்பங்களுக்கிடையில் அரச காணிகளை பிரித்துக்கொள்வதில் அரச காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, பின்னுரிமையாளர்களை நியமித்துக்கொள்ளுவது ஆரோக்கியமான நடைமுறையாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .