Niroshini / 2016 மார்ச் 24 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
குச்சவெளி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்திக்கும் முகமாக, எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்குள் ஆசிரியர்களை நியமிக்குமாறும் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் அங்கு செல்ல மறுத்தால் கட்டாய விடுமுறையில் அனுப்புமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ உத்தரவிட்டார் .
திருகோணமலை குச்சவெளி பிரதேச மாணவர்களின் ஆர்பாட்டம் தொட்டர்பாக நேற்று (23) பிற்பகல், ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
இதன்போதே இவ்வாறு உத்தரவிட்டார்.
இதில், கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளர் என் .விஜேந்திரனிடம் பல குறைகளை கேட்டறிந்ததுடன் இரண்டு கிழமைகளுக்குள் ஆசிரியர்களை நியமிக்குமாறும் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் அங்கு செல்ல மறுத்தால் கட்டாய விடுமுறையில் அனுப்புமாறும் உத்தரவிட்டார் .
இதில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி .எம் அசங்க அபேவர்தன, மாகாண கல்வி பணிப்பாளர் எம். டி .எம் .நிஸாம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம்.அன்வர், குச்சவெளி பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
19 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026