Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
“கிண்ணியா பிரதேசத்தில் உள்ள ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் அவற்றை ஆக்கிரமித்து வருபவர்களிடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறோம்” என, கிண்ணியா பிரதேச செயலாளா் எம்.ஏ.அனஸ் தெரிவித்தார்.
கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய சுற்றாடல் படையணியினருக்கு சின்னம் சூட்டும் வைபவம் நேற்று அதிபர் திருமதி என்.எஸ். அமீன்வாரி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கிண்ணியாவின் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீதமானவை ஈரநிலப் பிரதேசங்களாகும். கிண்ணியாவுக்கு என்று தனியான அடையாளத்தையும் அழகையும் இந்தப் பிரதேசங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பெறுமதி தெரியாது அவற்றை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் மக்கள் தொடர்ந்தும் ஈடுபட்ட வருகின்றனர்.
சொத்தாசை பிடித்தவர்களும் வசதிபடைத்தவர்களுமே இந்த நிலங்களைப் பிடித்து வேலி அமைப்பதிலும் மதில் கட்டுவதிலும் வீடு கட்டுவதிலும் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போனால் அரசியல்வாதிகளிடம் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அத்தோடு, தற்போது இருக்கின்ற ஈரநிலங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் ஏற்கெனவே வீடு கட்டியிருக்கும் பக்கத்துக்காரர்களுக்கு ஏன் நடிவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் எஙகளிடம் கேட்கின்றனர்.இங்கேதான் நாங்கள் சட்டரீதியான சவால்களையும் எதிர் நோக்குகின்றோம்.
அதாவது இவர்கள் 25 வருடங்களுக்கு மேலாக குடியிருந்ததற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றார்கள். எனவேதான் சட்ட ரீதியான சிக்கல்களையும் எதிர்நோக்கிய வண்ணம் நிர்வாகத்தைக் நடாத்த வேண்டியிருக்கிறது. இருந்தும், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் கடந்த வருடம் 25பேருக்கு எதிராக நீதமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறோம்.
பருவமழை காலத்தில் இப்பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு இந்த ஈரநில ஆக்கிரமிப்பே பிரதான காரணமாக இருக்கின்றது. பெரியாற்றமுனைப் பிரதேசத்தில் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதமிக்கப்பட்டடுள்ளனர். இதற்குக் காரணம் பொதுமக்கள் அந்தப் பிரதேசத்தில் உள்ள கரையோரப் பகுதிகளில் குப்பை கூழங்களை கொட்டி வருவதுதான்” என்று தெரிவித்தார்.
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago