Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றிக்கான ஆரம்பமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரநடுகைத் திட்டமாகும் என, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கந்தளாய் பேராறு பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (08) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த முதலாம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் அடுத்த தேர்தலுக்கான வெற்றிப்பாதையே, நட்டிய மரம் வளர்வது போல் கட்சியும் வளர வேண்டும், தற்போது நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அலை அலையாய் மக்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
அனைவரும் கட்சியை வளர்ப்பதற்கு முன்வரவேண்டியதோடு, சிறந்த தலைமைத்துவமே கட்சியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அயராது பாடுபட்டு வருவதைக் காணமுடிகின்றது. நாடு நல்லாட்சியில் இருந்து வருகின்ற நிலையில் ஆங்காங்கே முஸ்லிம் மதஸ்தானங்களில் கைவைக்கும் நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை.
இவ்விடயங்களில் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு இனக்கலவரங்களுக்கு அரசாங்கம் காரணமாக இருந்து விடக்கூடாது.
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைத்து வருகின்றேன். ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் தன்னை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் இன, மதம், பேதம் பாராது அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.
4 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago