Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 24 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும், உங்களின் ஒத்துழைப்புகளும் சேவைகளும், கட்சியையும் பிரதேசத்தையும் வளர்ப்பதற்கான சந்தர்ப்பமாக அமையும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேன தெரிவித்தார்.
திருகோணமலை, கந்தளாயில் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு நிலைய அமைப்பாளர்களுக்கான கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கும் உதவியதும் கட்சியை முன்கொண்டு செல்வதும் தொகுதி அமைப்பாளர்களே, திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கம் மோலோங்கி வருகின்றது. அதனைத் தக்கவைத்து எதிர்வருகின்ற தேர்தல்களில் வெற்றியை பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
அதேபோன்று ஒவ்வொரு மாதமும் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்வதன் மூலமே, மக்களும் ஆட்சி அமைப்பாளர்களும் எம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படும்.
அடுத்து வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் மக்கள் முன்வைக்கும் மக்கள் பிரதிநிதிகளே நான் தேர்தல் களத்தில் இறக்குவேன், மக்கள் விருப்பமின்றி எதனையும் நான் மேற்கொள்ளமாட்டேன் என்ற அவர், கட்சியை முன்கொண்டு செல்ல அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .