Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 27 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
' கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது, நாங்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். எங்களிடம், எதிர்காலத்தை வெற்றி கொள்வதற்கு இருக்கின்ற ஒரேயோர் ஆயுதம் கல்வியாகும். இதனை சிறப்பாக கற்கின்ற போது, உங்களைப் போன்ற மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக மிளரும்' என மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்தார்.
கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது, தமது தாய் அல்லது தந்தையரை இழந்த, தோப்பூர், முன்னம்பொடிவெட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
'கடந்த கால யுத்த நிலைமையின் போது மூதூர் பிரதேசத்தில் காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் நூற்றுக்கணக்கானோர் இருக்கின்றார்கள். அவர்களது குடும்பத்திற்காக மூதூர் பிரஜைகள் குழு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றது.
அந்த வகையில், மூதூர் பிரதேசத்தில் காணாமல் போனோருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து காணாமல் போனோரின் குடும்பங்களை இணைத்து கடந்த ஏப்பிரல் மாதம் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற் கொண்டோம்.
அத்தோடு மூதூர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தோம். அவ்வாறு கையளித்து பல மாதங்கள் கடந்தும், இன்னும் தகுந்த பதிலெதுவும்அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை இது கவலையளிக்கு விடயமாக இருக்கின்றது.
மூதூர் பிரதேசத்தில் காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை இணைத்து அகிம்சை ரீதியில் தொடர்ந்தும் போராட்டங்களை மேற்கொள்வோம்' எனவும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago