2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 22 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் தேடிக் கண்டறியும் குடும்பங்களுக்கான வவுனியா சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை முதல் வவுனியாவில் மேற்கொள்ளப்படவுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு, கிழக்கு தமிழத்; தயாகத்தின் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்; தலைவி  நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக அன்றையதினம் காலை 8 மணி  தொடக்கம் மாலை 4 மணிவரை அடையாள உண்ணாவிரதப்  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைக் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பல தரப்பட்ட ஆர்ப்பாட்டங்களை  மேற்கொண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எதுவித பதிலும் அரசாங்கம் தராத பட்சத்தில் முதற்கட்டமாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் சிறந்த பதில் கிடைக்காத பட்சத்திலேயே இரண்டாம் கட்டமாக சாகும் வரையான உண்hணவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X