2025 மே 19, திங்கட்கிழமை

16 கிலோகிராம் மான் இறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை பிரதேசத்தில், சட்டவிரோதமாக, 16 கிலோகிராம் மான் இறைச்சியை கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு, 25,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்றுப் புதன்கிழமை(10) உத்தரவிட்டார்.

திருகோணமலை, மொறவௌ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்தநபர், மொறவௌ பகுதியிலிருந்து திருகோணமலைக்கு சட்டவிரோதமாக, 16 கிலோகிராம் மான் இறைச்சியைக் கொண்டு சென்ற போது, பொலிஸாரினால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு, பொலிஸாரினால் அவருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்நபருக்கெதிராக நடைபெற்று வந்த வழக்கில், அவரைக் குற்றவாளியாக இணங்கண்ட நீதிமன்றம், அவருக்கு மேற்கண்டாவாறு உத்தரவிட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X