Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டுவரையான காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு, 4,500 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி கஷ்டப்படுவதாக கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றியுள்ள பட்டதாரிகள் எதிர்நோக்கும்; பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருடன் திருகோணமலையில் புதன்கிழமை (15) மாலை நடைபெற்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கமானது எங்களை மறந்துவிட்டு புறந்தள்ளிச் செயற்பட்டு வருவதை நினைத்துக் கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில், 'இந்த நல்லாட்சி அரசாங்கமானது யாரையும் மறக்கவும் இல்லை, புறந்தள்ளிச் செயற்படவும் இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற காலம் முதல் இன்றுவரையும் பட்டதாரிகள் மற்றும் அதிபர்களுக்கான நியமனங்களை வழங்கி வருகின்றது. உங்களுக்கும் மிக விரைவில் நியமனங்கள் கிடைக்கும்.
கடந்த வருடம் நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தி அடைந்து, நேர்முகப் பரீட்சையில் தெரிவான 222 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளன.
இதில் தழிழ்மொழி மூல ஆசிரியர்கள் 164 பேருக்கும் சிங்களமொழி மூல ஆசிரியர்கள் 58 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. ஆகவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நீங்கள் பிழையாக நினைக்க வேண்டாம்' என்றார்.
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago