Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தின் இரண்டாம்; வட்டாரத்திலுள்ள வீட்டு வளாகமொன்றில் காணப்பட்ட கிணற்றிலிருந்து 60 மில்லிமீற்றர் ரக 44 மோட்டார் குண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (03) மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயன்படுத்தப்படாத நிலையிலிருந்த இந்தக் கிணற்றை துப்புரவு செய்துகொண்டிருந்த வேளையில் அக்கிணற்றில் மோட்டார் குண்டுகள் காணப்பட்டதை வளாக உரிமையாளர் அவதானித்துள்ளார். இது தொடர்பில் தமக்கு அவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இந்தக் குண்டுகளை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீட்டு வளாகத்தில் ஏற்கெனவே கடற்படை முகாம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago