Sudharshini / 2016 ஜனவரி 02 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்திலுள்ள 4 சுகாதார சேவைகள் பிராந்திய பணிமனை காரியாலயங்களுக்கும், புதிதாக 09 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், திருகோணமலை மாகாண பணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து வியாழக்கிழமை (31) வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 09 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் 3 பேர் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்துக்கும் 3 பேர் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்துக்கும் 3 பேர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்துக்கும் ஒருவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலயத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி 09 பேரையும் திங்கட்கிழமை (04) கடமைகளை பொறுப்பேற்கும்படி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், பணித்துள்ளார்.

5 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
44 minute ago