2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிறுபோகச் செய்கைக்கான ஆரம்ப வேலை

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                       

திருகோணமலை, கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுபோகச் செய்கையையிட்டு முதற்கட்டமாக கந்தளாய்க் குளத்து நீர் எதிர்வரும்; 25ஆம் திகதி திறந்துவிடப்படவுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களின் பகுதிகளுக்குட்பட்ட வாய்கால்கள், வரம்புகளை  துப்புரவு செய்து ஆரம்பப் பண்படுத்தல் வேலைகளைச் செய்யுமாறு கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

கந்தளாய்க் குளத்தின் நீரைப் பயன்படுத்தி கந்தளாய், பேராறு, பொட்டம் காடு, பழையவெளி, தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கிண்ணியா ஆகிய  பகுதிகளில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும், அதிகமான நீர் விரையமாவதாக  முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவ்விடயத்தில் விவசாயிகள் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுபோகச் செய்கைக்கான விதைப்பு வேலை மே மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் முன்னெடுக்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X