Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
புதிய அரசியல் அமைப்பில் இன விகிதாசாரத்துக்கேற்ப தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால், அதில் 22 உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்காகவும் 28 உறுப்பினர்கள் தமிழ் சமூகத்துக்காகவும் 14 உறுப்பினர்கள் மலையகத் தமிழர்களுக்காகவும் இருக்க வேண்டும். ஆனால் அந்த நிலை இல்லையெனவும் அவர் கூறினார்.
புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (22) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் நிலையான சமய, சமூக நல்லுறவுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு காலத்தின் தேவையாக உள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்களின் கருத்தறிந்து புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியும் சட்டமும் மக்களுக்காகவே. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படுகின்ற ஆட்சியே மக்களாட்சியாகும். இதையே ஜனநாயகம் என்கின்றனர்.
'ஒற்றையாட்சி என்ற சொல் வடக்கு மக்களுக்கு பூதகமாகக் காட்டப்படுகின்றது. அதேபோன்று சமஷ்டி என்ற சொல் தென்பகுதி மக்களுக்கு பூதகமாகக் காட்டப்படுகின்றது' என்றார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026