Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 08 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,பதுர்தீன் சியானா
தமிழ் வேடுவர்களின் காணிகளை திருகோணமலை, தோப்பூர் பிரதேச முஸ்லிம்கள் பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
இது தமிழ் -முஸ்லிம் முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கையாகும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'தோப்பூர் முஸ்லிம்களின் பல காணிகள் விடுதலைப் புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டதால், 30 வருடங்களாக அவர்களால் தங்களின் காணிகளுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், முஸ்லிம்களால் தங்களின் காணிகளில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட தமிழ் வேடுவர்கள் அக்காணிகளில் குடியேறினர். யுத்தம் முடிந்த பின்னர் முஸ்லிம்கள் தங்களின் காணி உறுதிப்பத்திரங்களைக் காட்டியே தங்களின் காணிகளைச் சொந்தம் கொண்டாடுகின்றனர். இது புரியாமல் சில தமிழ் அரசியல்வாதிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வேடுவர்கள் காட்டை தங்களின் வாழ்விடமாகக் கொண்டவர்கள். மேற்படி பிரதேசம் கரையோரம் என்பதால், அது வேடுவர் பூமி அல்ல என்பது தெளிவாகிறது. அத்துடன், முஸ்லிம்கள் தங்களின் பிராணிகளை அப்பிரதேசங்களில் வளர்க்குமாறு வேடுவர்களுக்கு பணித்ததாக கூறப்படுவதன் மூலம் புலிகளின்; காலத்தில் முஸ்லிம்கள் தங்களின் காணிகளுக்கு போக முடியாத சூழல் இருந்ததால், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் தங்களின் காணிகளைப் பார்க்குமாறு தமிழ் மக்களிடம்
கொடுத்திருந்தமை போன்று தோப்பூரை அண்டிய முஸ்லிம்கள் தங்களின் காணிகளில் பிராணிகளை வளர்க்குமாறு வேடுவர்களுக்கு வழங்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், இன்னும் சில முஸ்லிம்கள் பணம் கொடுத்து காணிகளை பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. ஆகவே, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி தமிழ் -முஸ்லிம்
முரண்பாடுகளை யாரும் வளர்க்க வேண்டாம் என்று உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .