2025 மே 21, புதன்கிழமை

2 தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2016 ஜூன் 11 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்    கியாஸ்
 
இரண்டு தேசிய அடையாள அட்டைகளையும் இரண்டும் வாகன அனுமதிப்பத்திரத்தையும் வைத்திருந்த ஒருவரை திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸார் இன்று (11) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

குறித்த நபர், மற்றுமொரு நபருடன்; திருகோணமலையில் இருந்து குச்சவெளிக்கு வந்துகொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த வானை நிறுத்தி சோதனையிட்ட போதே அதிலொருவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு தேசிய அடையாள அட்டை குருநாகல் முகவரியையும் மற்றைய தேசிய அடையாள அட்டை பொல்கஹவெல முகவரியையும் கொண்டிருந்ததோடு அதிலொரு தேசிய அடையாள அட்டையில் பிறந்த ஆண்டு 1978 ஆண்டு என்றும் மற்றையதில் 1970 ஆண்டு என்றும் குறிக்கப்பட்டடிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று (11) மலை திருகோணமலை, குச்சவெளி நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தேசிய அடையாள அட்டைகள் இரண்டை வைத்திருந்த சந்தேகநபரை, இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் மற்றைய நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்லுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X