2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் புல்லுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்வேர்ட் எக்மன் ஜெகதீஷ் (வயது 47) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள புல்லு குளத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (08) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

நேற்று சனிக்கிழமை (09) அவருடைய சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணை மேற்கொண்டார்.

இதன்போது, குறித்த நபர் கனடா நாட்டில் மனைவியும் மகளும்  வசிக்கும் நிலையில், அவர் இலங்கை வந்திருந்த சமயம் வலிப்பு நோயால் காரணமாக புல்லுக்குள கட்டில் இருந்த போது குளத்தில்  விழுந்துள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் அடுத்து சகோதரரிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X