Niroshini / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் இன்று(17) பகலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் வைப்பகத்தில் இருந்த 3இலட்சத்து 76ஆயிரம் ரூபாய் இனந்தெரியாதோரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஜெசீர் என்பவர் அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளையில் 3இலட்சத்து 76ஆயிரம் ரூபாயினை மீள் எடுத்த வண்னம் தனக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியில் வீட்டினை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடைக்கு பொருள் கொள்வனவுக்காக தனது முச்சக்கரவண்டியின் வைப்பகத்தில் பணத்தை வைத்து விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் வந்து பார்த்தபோது முச்சக்கர வண்டியின் வைப்பகம் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இதுவரை சந்தேகத்தின் பெரில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago