2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'பாடசாலைகளில் வேறுபாடுகளுக்கு மத்தியில் கற்பிக்கப்படுகின்றது'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பாடசாலைகளில் கல்வி பயிலும்போது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகளுக்கு மத்தியில் கற்பிக்கப்படுகின்றது. அதேவேளை தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று பாடசாலைகளுக்கு இடையிலும்; பிரிவினை காட்டப்படுகின்றது. இந்த நிலைமை மாறவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாணசபை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, இரண்டு நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டு உரையாற்றியபோதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வௌ;வேறு பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டு  அதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிச் செல்லும்போது அங்கு இன, மத, மொழி வேறுபாடுகள் எமது சமூகத்தில் இருக்கக் கூடாது பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பின்னரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமெனவும்  மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர்.

ஆரம்பக் கல்வியின்போது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று பிரிவினை காட்டி கற்பித்துவிட்டு, பின்னர் இவ்வாறு நடக்கக் கூடாதெனக் கூறினால், அது எவ்வாறு நடக்கப்போகின்றது? இந்த நிலைமை ஆரம்பக் கல்விப் பருவத்திலேயே மாற்றப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .