2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'பாதுகாப்பான புலம்பெயர்வை மேற்கொள்ளுங்கள்'

Thipaan   / 2016 நவம்பர் 01 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

“பாதுகாப்பான புலம்பெயர்வை மேற்கொள்ளுங்கள், மாறாக, இலங்கையில் உள்ள இளைஞர்கள் பாதுகாப்பில்லாத புலம்பெயர்தலை மேற்கொள்ளல் மூலம் பல்வேறு பாதிப்புக்களை அனுபவித்து வருகின்றனர். அது முறையற்றது” என, புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இணைப்பாளர் மயூரன் மேரி லம்பேட் தெரிவித்தார்

“சட்டரீதியான பாதுகாப்பான புலப்பெயர்வை இளைஞர்கள் மேற் கொள்வதை எமது அமைப்பு ஊக்குவிக்கிறது”  எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை உப்புவெளி தொழிற்பயிற்சி நிலையத்தின் மூலம் பயிற்சியை நிறைவு செய்த 80 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (31) இடம்பெற்றது. அதில், அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“ திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கடந்த காலங்களில் பாதுகாப்பற்ற புலம் பெயர்வை பலர்
மேற்கொண்டுள்ளனர். ஆகையால், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியின் மூலம் தொழிற்கல்வி ஒன்றை மேற் கொள்வதற்கான நிதியைப் பெற்று, நாம் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளோம்.

மேலும் தையல் பயிற்சியை நிறைவு செய்த 19 பேருக்கான தையல் இயந்திரங்கள், அவர்களுடைய சிறிய நிதிப் பங்களிப்பையும் எமது நிதியையும் சேர்த்து, வழங்கி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அழகுக்கலை பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு பயிற்சியைப் பெற்றவர்கள் இதன் மூலம் சுயதொழில் ஒன்றை மேற் கொண்டு கௌரவமாக தமது சொந்தக் காலில் நின்று தாமும் தமது குடும்பத்தாரும் சந்தோசமாக வாழவழிவகுக்க வேண்டும்” என தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .