Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் ரக வாகனமொன்றில் மணல் ஏற்றிவந்த குற்றச்சாட்டின் பேரில் அவ்வாகனச் சாரதியை ஞாயிற்றுக்கிழமை (21) மாலை பொலிஸார் கைதுசெய்தனர்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட இச்சாரதியை நாளை செவ்வாய்க்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பொலிஸார் பணித்துள்ளனர்.
மூதூர் கங்கைப் பகுதியில் மணல் ஏற்றிய வாகனமொன்று பச்சநூர் பகுதியூடாகப் பயணிப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று மணல் ஏற்றிவந்த வாகனத்துடன் சாரதியைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
32 minute ago