2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

மூதூரில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்,எஸ்.சசிகுமார்

காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை சர்தேச நிபுணர்கள் முன்னிலையில் முன்னெடுக்க வேண்டுமென திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின்; குடும்பங்களுக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டுமென்பதுடன், உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கோரியும் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரை மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் அக்குழுவின்; தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் கையளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .