2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'மினிப்பே அணையை உயர்த்தல் விவசாயிகளைப் பாதிக்கும்'

Thipaan   / 2016 நவம்பர் 03 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மினிப்பே அபிவிருத்தித்திட்டத்தின் கீழ், மினிப்பே அணைக்கட்டை மேலும் 12 அடி உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், திருகோணமலை அல்லை நீர்ப்பாசனத்துக்குட்பட்ட 20 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுமென, அல்லை ஒன்றிணைந்த 42 விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அது மாத்திரமின்றி, மூதூர், ஈச்சிலம்பற்று மற்றும் சேருநுவர பிரதேசங்களிலுள்ள 80 ஆயிரம் குடும்பங்களுக்கான, நீர்வளமாகத் திகழ்கிறது.

இதுதொடர்பில், அச்சங்கங்கள், நேற்றுப் புதன்கிழமை (02) வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரங்களிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இதனைத் தடுத்து நிறுத்துமாறு கடந்த மாதம் சேருநுவர பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டும் இதுவரையில் அரசாங்கத்திடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை.

மகாவலி கங்கையிலிருந்து மாவிலாறு ஊடாகப் பாயும் இந்நீரால், மூதூர், ஈச்சிலம்பற்று மற்றும் சேருநுவர பிரதேசங்களிலுள்ள 20 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைகின்றன. மேய்ச்சல் நிலங்கள் செழிப்படைந்து ஆடு, மாடுகள் வளர்ப்பும் வெற்றி கண்டுள்ளது.

இத்தனையும் நாசமடையாதிருக்க நல்லாட்சி அரசாங்கத்துக்கு முழுமூச்சாய் உழைத்த எமக்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும் எனவும் இவ்விடயத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட திருகோணமலை மாவட்டத்தை அரசியல் ஊடாக ஆட்சி செய்பவர்கள் அதிக கவனமெடுக்க வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .