George / 2016 மே 21 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை ஆலங்கேணி பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி 1500 மில்லிலீற்றர் சாராயத்தை கொண்டு சென்ற நபருக்கு 12 ஆயிரம் அபராதம் விதித்து திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.
இதேவேளை, அபராதம் செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனை விதிப்பதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா, நடுஊற்று பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆலங்கேணி பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சாராயத்தை நடுஊற்றுப் பகுதிக்குச் கொண்டு சென்ற போது குறித்த நபர், கிண்ணியா பொலிஸாரால் வியாழக்கிழமை (19) இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago