2025 ஜூலை 28, திங்கட்கிழமை

130 லீற்றர் பனங்கள்ளுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழையூற்றுப் பகுதியில், 130 லீற்றர் பனங்கள்ளை சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைத்திருந்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை நேற்று (05) மாலை கைது செய்துள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய  தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோதே, மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .