2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை -ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியுடன் டிமோ பட்டா ரக வாகனம் மோதியே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

ஈத்தல்வெட்டுனுவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜமால்தீன் முசீதா உம்மா (வயது 37) என்பவரே பலியாகியுள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணின் கணவர் ஏ.ஏ.சலாம் (வயது 45) மற்றும் முச்சக்கரவண்டிச்; சாரதி ஜ.பைரூஸ் (வயது 29) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த டிமோ பட்டா ரக வாகனச் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .