Niroshini / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் விரைவில் 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனிஸ் தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 135 பேருக்கும் மட்டக்கிளப்பு மாவட்டத்தில் 61 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 249 பேருக்குமாக 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
கூடிய விரைவில் அனைவருக்கும் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற சிலர், தாமதமாக தங்களது தகவல்களை வழங்கியவர்களின் விவரங்கள் மாகாண கல்வி அமைச்சரினால் அமைச்சசரவை அங்கிகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025