Suganthini Ratnam / 2016 மார்ச் 03 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,பதுர்தீன் சியானா
திருகோணமலை, பட்டிணமும்சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்காக 1984.09.12 அன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தப்பட்டிருந்த 07 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 756 ஹெக்ரேயரில்; 3,257 குடியிருப்புகள் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான அனுமதியை துறைமுக அதிகாரசபை வழங்கியுள்ளது.
திருகோணமலை அரசாங்க அதிபர் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டத்தின்போதே, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'பட்டிணமும்சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 42 கிராம அலுவலர்; பிரிவுகள் உள்ளன. இதில் 11 கிராம அலுவலர்; பிரிவுகளான இலிங்கநகர், மட்கோ, பூம்புகார், சிங்கபுர, கப்பல்துறை, முத்துநகர், சீனக்குடா, கவாட்டிக்குடா, நாச்சிக்குடா, வெள்ளைமணல், சுமேதங்கரபுர ஆகிய பகுதிகளை 1984.09.12 அன்று அறிவிக்கப்பட்ட 314ஃ10 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தலின் படி 1,975 ஹெக்ரேயர் காணிகள் துறைமுக அதிகாரசபைக்கு உரித்துடையதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 7 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும். மீதமுள்ள 4 கிராமங்களான மட்கோ, பூம்புகார், சிங்கபுர, கவாட்டிக்குடா ஆகியவற்றின் 1,219 ஹெக்ரேயர் காணிகளை விடுவிக்க துறைமுக அதிகாரசபையிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. எனினும்,; எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக இக்காணிகளும் விடுவிக்கப்படும். இப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் அக்காணிகளிலேயே தொடர்ந்து குடியிருக்கலாம். தேவை ஏற்படும்போது மாற்று இட ஒழுங்குடன் போன்ற இணக்கத்துடன் இக்காணி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026