2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

சம்மாவச்சத் தீவு தகவல் திரட்டு – 2014 நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் சம்மாவச்சத்தீவு கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்லமினால் தொகுக்கப்பட்ட 'சம்மாவச்சத் தீவு தகவல் திரட்டு – 2014' நூல் வெளியீட்டு நிகழ்வு செவ்வாயக்கிழமை சம்மாவச்சத்தீவு காரியாலயத்தில் இடம்பெற்றது.

கிராம உத்தியோகத்தர் பிரிவின் தகவல் அடங்கிய இந்நூல் வெளியீட்டு விழா நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலக உதவிச் செயலாளர் யு.அஜீதா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.ராஜர்கான் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அருந்தவச் செல்வம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிண்ணியா பூவரசந் தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவின் தகவல் அடங்கிய  'பூவரசந் தீவு தகவல் மஞ்சரி- 2009' நூல் வெளியீட்டு வைபவம் 2010 ஆம் ஆண்டில் இவரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .