2025 மே 10, சனிக்கிழமை

திருமலை நகரில் டெங்கு தீவிரம்; 8 பேர் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 28 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக பரவிவருவதுடன் இதுவரை 8 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பிரதேசத்தில் ஒருவரும் செல்வநாகபுரத்தில் ஒருவரும் சிவபுரி என்னும் இடத்தில் 4 பேரும்  துறைமுகப்பொலிஸ் பகுதியில் 6 பேரும்; டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, திருகோணமலை நகரில் அருணகிரி கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு வேகமாகப்பரவி வருவதாக திருகோணமலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் து.தவக்கொடிராசா தெரிவித்தார்.

இதனையடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X