2025 மே 15, வியாழக்கிழமை

மூதூரில் ஏ.எச்1.என்1 நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஏ.எச்1.என்1 நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி போடுவதற்காக பெருந்தொகையான கர்ப்பிணிப் பெண்கள் இன்று  வியாழக்கிழமை வந்திருந்தனர்.

தற்போது நாட்டில் மிக விரைவாகப் பரவி வரும் ஏ.எச்1.என்1 நோய்த் தொற்றுக்கான மருந்தை நாளை வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனைத்து கர்ப்பிணிகளும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு அறிவுறுத்தியடுத்து, நாடளாவிய ரீதியில் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வதில் கர்ப்பிணிப் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஏ.எச்1.என்1 நோய்த் தொற்றுக்கு 350 பேர்  உள்ளாகியுள்ளதுடன்,  அவர்களில் 22 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நோயினால் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்ப்பிரிவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடும் காய்ச்சல், இருமல், தடிமன், சுவாசிப்பதில் சிரமம் முதலான நோய் அறிகுறிகள்  மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருக்கும் எனின் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களைக் கேட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .