2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கை மீனவர்கள் 111 பேருக்கும் பிணை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கடற்பரப்பில்   விதிமுறைகளை மீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 111 பேரும் தலா 50.000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி வியாழக்கிழமை  13 படகுகளில் வைத்து 89 மீனவர்களும், கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை  படகுகளில் 22 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீன்பிடித்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களை  பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் முன்னிலையில் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும். 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஆஜர் படுத்தியிருந்தனர். இதன்போது இவர்களை இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைத்திருக்குமாறு நீதவான் உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர்களை இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதவான், பிணையில் விடுதலை செய்தார். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பர் மாதம் நான்காம் திகதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .