2025 மே 14, புதன்கிழமை

ஏ - 15 வீதியை திறக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 09 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா - மூதூர் உறவுப்பாலமாக விளங்கிய ஏ - 15 மட்டக்களப்பு பிரதான வீதி தரை வழிப்பாதையை  மீண்டும் பாவனைக்கு திறந்து விடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் பெய்த அடை மழை காரணமாக பாதைகள் துண்;டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் திறக்கப்படாது இவ்வீதி காணப்படுகின்றது.

இவ் வீதியூடாக மக்கள் மூதூர், தோப்பூர், கிளிவெட்டி, மேன்காமம், வெருகல், வாகரை, மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற பல்வேறு இடங்களுக்கான வாகனப் போக்குவரத்து இடம்பெற்றிருந்தன.  தற்போது இவ்வீதி மூடப்பட்டுள்ளதால் திருகோணமலைக்குச் சென்று கப்பல் மூலம் மூதூருக்குச் செல்ல வேண்டி துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது. இதனால் அதிகளவான நேரமும் பணமும் வீண்விரயமாவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .