2025 மே 10, சனிக்கிழமை

திருமலை வைத்தியசாலைக்கு 2 இன்குபேட்டர் கருவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலை பொது வைத்தியசாலை சிறுவர் பிரிவுக்கு 3.3 மில்லியன் பெறுமதியான  2 இன்குபேட்டர் கருவிகளை வழங்கியுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட பணிப்பாளர் நிரோசன் இதனை பொது வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளனிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில்  இலங்கை  செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை நிறைவேற்று பணிப்பாளர் ரவிச்சந்திரனும் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X