Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை, கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட தீனேரி கிராமத்தில் அரச காணிகளில் அத்துமீறி நிர்மாணிக்கப்பட்டிருந்த சுமார் 30 தற்காலிக வீடுகள் பாதுகாப்பு தரப்பினரால் இன்று காலை இடிக்கப்பட்டன.
குறித்த கிராமத்துக்கு இன்று அதிகாலை சென்ற பொலிஸாரும் விமானப் படையினரும் மேற்படி தற்காலிக வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச காணிகளில் வீடுகளை நிர்மாணித்து அங்கு தங்கியிருந்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்க அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறாத பட்சத்தில் மேற்படி வீடுகள் உடைக்கப்பட்டதாக மேலும் குறிப்பிடத்தக்கது.
a.l.rafaideen Tuesday, 02 November 2010 10:55 PM
இது
ஒரு அநீதியான செயல்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .