2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இந்திய மீனவர்கள் 32 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய மீனவர்கள் 32 பேரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு  திருகோணமலை மாவட்ட நீதவான் யு.எல்.எம்.அஸ்ஹர் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை  நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இந்திய மீனவர்கள் 32 பேரையும் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் புல்மோட்டை கடற்பரப்பில் 04 படகுகளுடன்  இந்திய மீனவர்கள் 32 பேரும் 02 மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த மீனவர்களின்; 04 படகுகளும் கப்பல் கட்டும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .