Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு நிவாரணங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதேச செயலாளர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பான உயர்மட்ட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தியே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்
மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா தலைமையில் நடைபெற்ற .இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, எம்.எஸ்.தௌபீக் மற்றும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுநிருபத்தை காரணம் காட்டாது தேவைப்பபடும் பட்சத்தில் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago