2025 மே 10, சனிக்கிழமை

2ஆவது கிழக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன், சி.குருநாதன்)

இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் முதலாவது வரவு - செலவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் 5 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 20 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், வரவு - செலவுத்திட்ட விவாதத்தை முடித்து வைத்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

ஆதரவாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் மொத்தமாக 20 உறுப்பினர்கள் வாக்களித்தனர். விவாதத்திற்கு தலைமை வகித்த ஆளும் கட்சியைச் சேர்ந்த சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி வாக்களிக்கவில்லை.

இன்னொரு ஆளும் கட்சி உறுப்பினர் ஹசன் மௌலவி சுகயீனம் காரணமாக சபைக்கு வரவில்லை.

ஏதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் மொத்தமாக 15 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X