A.P.Mathan / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இறால்குழி விவசாயிகள் நீண்ட காலமாக செய்கை பண்ணி வந்த விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கான அனுமதியை வழங்கு மாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள இறால்குழி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் வேளாண்மையையும் தோட்டச் செய்கையையும் செய்து வந்த இக்கிராம மக்களுக்கு மீழக்குடியமர்வின் பின்னர் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ள தமக்கு, இதற்கான அனுமதியினை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண விவசாயம் கால்நடை அமைச்சர் துரையப்பா நவரெத்தினராஜாவிடம் பிரதேசவாசிகள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .