2025 மே 15, வியாழக்கிழமை

மூதூர் பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதி மக்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (முறாசில்)

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையினால் மூதூர் பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதால்,  அப்பகுதி  மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மூதூர் பிரதேச செயலாளர்; பிரிவிலுள்ள பஹ்ரியா நகர், ஹபீப் நகர், ஷக்பிநகர், இறால்குழி முதலான கிராமங்களின் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே  நீரில் மூழ்கியுள்ளன.

தாம் வசிக்கும் குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதனால் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்,  தமது இந்த நிலைமை குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் எவ்வித  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை அம்மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .